Skip to main content

குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன்.?

 👉 தினம் ஒரு தகவல்

குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன்.?

    குளித்த பின் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை.

    இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஓர் விஷடம் அடங்கியிருக்கின்றது. நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள்  உள்ளன. நன்மையும் தீமையும் நன்மையென்ற ஸ்ரீதேவியும் தீமையென்ற மூதேவியும். நாம் குளிப்பதற்காக தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலிலிருந்து வெளியேறுகின்றனர். பின் நமக்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். உடலில் யார் முதலில் திரும்ப நுழைய வேண்டும் என்பதற்கே இந்த போராட்டம். உடலில் எந்த பாகத்திலும் முதலாவது ஈரம் துடைத்து சுத்தமாகின்றதோ அப்பாகத்தில் மூதேவி நுழைந்து விடுவது வழக்கம். ஏனென்றால் இப்போராட்டத்தில் வெற்றியடைவது தீமையான மூதேவியே. இரண்டாவது முகம் துடைத்தால் அங்கு ஸ்ரீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள்.  



    மாறாக  முகத்தைம் முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள் முழுவதும் கழிக்க வேண்டியது தான். அதனால் முதலில் முதுகைத் துடைத்த பின் முகம் துடைக்க வேண்டுமென்ற போதனை பின் தலைமுறைகளுக்கு அளித்துள்ளனர் முன்னோர்கள்.

    இதைக் கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்றெண்ணி தள்ளிவிட வேண்டாம். இந்த நம்பிக்கையின் பின்னால் ஒரு மகத்தான அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது, இல்லாவிடில் நம் முன்னோர்கள் இந்த போதனையை விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள்.

    குளிக்கும் போது நம் உடலில் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகின்றது. மிக அதிகமான குளிர் அனுப்பப்படுவது முதுகிலாகும். முதுகெலும்பில் அதிகநேரம் குளிர் ஏற்க வேண்டியது வந்தால நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. இதனால் உண்டாகும் தீங்கைத் தவிர்க்கவே குளித்த உடன் முதுகைத் துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர்.

    ஆனால் குழாய்த்தண்ணீரில் குளித்து முடிப்பவர்களுக்கு இந்த சாஸ்திரம் பொருந்தாது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிமையாக நதியிலோ குளத்திலோ நெடுநேரம் மூழ்கிக்குளிப்பவர்களுக்காக வகுக்கப்பட்ட விதி இது.


Comments

Popular posts from this blog

தினம் ஒரு தகவல்

  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த Blogger- ல் வெளியிடப்படும் தகவல்கள் அனைத்தும் ஓலைச்சுவடி என்னும் நூலிலிருந்து படித்து பகிர்ந்துள்ளேன்.  தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி..  1. படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும் 2. வெறும் காலில் நடப்பது நல்லதா.? 3. தலைமூழ்கிக் குளித்தபின் உடலில் எண்ணை பூசக்கூடாது என்பது ஏன்.? 4. குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன்.? Follow My  YouTube Channel   And also  Join My Telegram  Group